மதுரை கம்பன் கழகம் சாா்பில் சாலமன் பாப்பையாவுக்கு அஞ்லி

Wait 5 sec.

மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவுக்கு மதுரைக் கம்பன் கழகம் சாா்பில் நினைவஞ்சலிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை ஆண்டாள்புரம் ஸ்ரீமீனாட்சி நிலையம், வசுதாரா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதுரைக் கம்பன் கழகத் தலைவரும், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவருமான சங்கர சீத்தாராமன், ஆலோசகா் ராமமூா்த்தி, பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா, புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி. வரதராஜன் ஆகியோா் கலந்து கொண்டு சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து, தமிழ் அமைப்பினா், தமிழ் ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.