நேபாளத்தின் சிலிம் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பு பகுதியை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நேபாள-இந்தியாவின் கூட்டு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனி மற்றும் பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. இதில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர்; 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போட்டகோஷி நதி வெள்ளநீரை அடித்துச் சென்றதில், வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன; மேலும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன.இந்தநிலையில், சிலிம் (Chilime) சுரங்கப்பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை அகற்றி, அங்குள்ள நிலத்தடி மின் நிலையத்தை அடையும் முயற்சியில் நேபாளம் - இந்தியாவின் கூட்டு மீட்புக் குழுக்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மின் நிலையத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.சக்கரங்கள் கொண்டு ஏற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப்பாதையின் முகப்புப் பகுதி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதி அகற்றப்பட்டதும், மீட்புக் குழுக்கள் சுரங்கப்பாதைக்குள் சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரி நவீன் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், சுரங்கப்பாதை அடைப்பை இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றது. சுரங்கப்பாதைக்குள் நீர் உட்புகுதல், பெரிய பாறைகள் குறுக்கிடுதல் போன்ற எதிர்பாராத சவால்களை இப்பணி எதிர்கொண்டுள்ளது. நீரை வெளியேற்ற சேறு உறிஞ்சும் பம்புகள் பயன்படுத்தப்படுவதாகவும், மின் நிலையத்தை அடையும் வகையிலான அகற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமையும் தொடரும். Nepal and India's joint rescue teams have reached the final stage of efforts to clear the blocked portion of the Chilime tunnel and reach an underground powerhouse, where six workers are believed to be trapped, authorities said.