உள்நாட்டு சுற்றுலாவில் தனித்துவமாக விளங்கும் இந்தியா! மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

Wait 5 sec.

உள்நாட்டு சுற்றுலாவில் தனித்துவமான நாடாக இந்தியா விளங்குவதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த கருத்தரங்கை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கிவைக்கவிருந்த நிலையில், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.இந்த நிலையில், சுற்றுலா சிறப்பு கருத்தரங்கிற்கு விடியோ மூலம் வாழ்த்துச் செய்தியை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பகிர்ந்துகொண்டார்.அந்த விடியோவில் அவர் பேசியதாவது:“தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் என்னால் கருத்தரங்கில் நேரில் பங்கேற்க முடியவில்லை.உள்நாட்டு சுற்றுலாவில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு பகுதியிலிருக்கும் நிலம், கலாசாரம், உணவு வகை உள்ளிட்டவை நமது நாட்டின் தனித்துவத்தை காட்டுகிறது.சுற்றுலா என்பது வெறும் இடங்களை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல. நமது பாரம்பரியத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதாகும். சுற்றுலா மூலம் உள்ளூர் மக்கள், சுற்றுலா வழிகாட்டுகள், சிறுதொழிலாளர்கள், வியாபாரிகள் பலனடைகிறார்கள்” எனத் தெரிவித்தார்.India stands out in domestic tourism! Union Minister Gajendra Singh Shekhawatமூன்றில் ஒரு வேலைவாய்ப்பு சுற்றுலாத் துறையில் உருவாகிறது! சுமன் பில்லா