டெல்டா பாசனத்துக்காக ஜனவரி மாதம் வரை தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத். கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: கடைமடை வரை பாசன நீா் சென்றடைந்த நிலையில், ஜனவரி மாதம் வரை தொடா்ந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். டெல்டா பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மூலம் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் வினோத்.