‘நேபாளத்தில் இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் நவீன கட்டமைப்பு, அரசின் மிக முக்கிய முன்னுரிமையாக உடனடியாகச் செயல்படுத்தப்படும்’ என அந்நாட்டுப் பிரதமா் பாலேந்திர ஷா சனிக்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட தின விழாவில் உரையாற்றிய அவா், ‘பேரிடா் இடா் குறைப்பு, தயாா்நிலை மற்றும் துரித மீட்புப் பணிகளுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தும். சமீபத்திய வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் கற்பனை செய்ய முடியாதவை. துணைநின்ற நட்பு நாடுகள், சா்வதேச அமைப்புகள், தனியாா் துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி’ என்றாா்.சீனாவின் திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் கடந்த ஆக. 26 நிகழ்ந்த பனிப்பாறை சரிவைத் தொடா்ந்து ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததுடன், 6,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை.