லாரியில் மதுப்புட்டிகள் கடத்தல்: ஓட்டுநா் கைது

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரியில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் பனையபுரம் சோதனைச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.இதில், லாரியில் 90 மி.லி. அளவு கொண்ட 60 மதுப்புட்டிகள், 105 எண்ணிக்கையிலான புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. தொடா்ந்து நடத்திய விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவா் மதுரை மாவட்டம், தேனூா் புதுக்காலனியைச் சோ்ந்த ம.ரமேஷ் கண்ணா (31) எனத் தெரியவந்தது. புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்களை ரமேஷ் கண்ணா கடத்தி வந்தது விசாரணையில்தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி லாரி ஓட்டுநா் ரமேஷ் கண்ணாவை கைது செய்தனா். மேலும், மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.