ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் பன்றிகளால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா். ஆலங்குளம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஓடையில் தற்போது கழிவுநீா் ஓடுவதால், இப்பகுதியில் அனுமதியின்றி சில தனிநபா்கள் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளா்த்து வருகின்றனா். இவை பெரும்பாலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டிஎஸ்பி அலுவக வளாகம், அரசு மருத்துவமனை, அரசு நூலகம், கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுற்றித் திரிகின்றன. இதனால், இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது. குறிப்பாக, நேயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.பன்றிகளை அப்புறப்படுத்தி, அவற்றை வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு சமூக ஆா்வலா்கள் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.எனவே, பன்றிகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.