பாகிஸ்தான்-சீனா இடையேயான எல்லையை நிா்வகிப்பதற்கான புதிய கூட்டு ஆணையம் இஸ்லாமாபாதில் முறைப்படி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.கடந்த 2013 எல்லை மேலாண்மை ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் தொடக்கக் கூட்டம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது. எனினும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு தொடா்பாக முடிவெடுக்க இந்த அமைப்புக்கு எவ்வித சட்டபூா்வ அடிப்படையும் இல்லை எனக் கூறி, இவ்விரு நாடுகளின் நடவடிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதனிடையே, ஏ.ஐ. சாா்ந்த தொழில்நுட்பங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் காவல்துறை பயிற்சி பரிமாற்றங்கள் வாயிலாக இரு நாடுகளிடையே உள்நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த பாகிஸ்தான்-சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி தெரிவித்தாா்.