என்டிபிசி செயில் பவர் நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Wait 5 sec.

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் என்டிபிசி செயில் பவர் நிறுவனத்தில் காலியாகவுள்ள மூத்த உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.22-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01 / 2026பணி: Sr.Assistant Officer (HR)காலியிடங்கள்: 4தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மனித வளம், தொழில் உறவுகள், பணியாளர் மேலாண்மை ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Sr.Asistant Officer (Law)காலியிடம்: 1தகுதி: சட்டத் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.பணி: Sr.Assistant Engineerபிரிவு: Electrical - 4பிரிவு: Mechanical - 4பிரிவு: C & I - 2பிரிவு: IT/ERP - 2தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இயந்திரவியல், உற்பத்தி, மின்னணுவியல், கட்டுப்பாடு மற்றும் கருவியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய ஏதாதொரு பிரிவில் பிஇ , பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,400வயதுவரம்பு: 22.9.2026 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: https://www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.9.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.NSPCL SAIL Recruitment 2026 for 17 Senior Assistant Engineer Postsஓமன் நாட்டில் பணி வாய்ப்பு: தமிழக அரசு தகவல்