டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்கள்..! சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த 11 முறையும் இந்தியா 100% வெற்றி!

Wait 5 sec.

டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் 9000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இந்தியாவுக்காக அவர் டி20 கிரிக்கெட்டில் 11 முறை அரைசதத்தை கடக்கும்போது அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்று அசத்தியது.இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கு முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்தார்.டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். பின்னர், சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்தபோது அசத்தலாக விளையாடியுள்ளார். ஐபிஎல் அணியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். மொத்தமாக, இதுவரை 351 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 9027 ரன்கள் எடுத்துள்ளார். 140 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடும் இவரது சராசரி 30க்கும் அதிகமாக இருக்கிறது. டி20யில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்1. விராட் கோலி - 14,218 ரன்கள் 2. ரோஹித் சர்மா - 12,531 ரன்கள்3. ஷிகர் தவான் - 9,797 ரன்கள்4. சஞ்சு சாம்சன் - 9,027 ரன்கள்5. சூர்யகுமார் யாதவ் - 8,975 ரன்கள்9K runs magic in the air! ✨#WhistlePodu #AFGvIND pic.twitter.com/4tymdzdW0L— Chennai Super Kings (@ChennaiIPL) September 17, 2026கிரிக்கெட்டின் எர்லிங் ஹாலண்ட் அபிஷேக் சர்மா..! வைரலாகும் புகைப்படங்கள்!9,000 runs in T20 cricket! India has a 100% win record in all 11 matches where Sanju Samson scored a half-century!