இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் ’வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ வெளியாகியுள்ளது. இதில் அந்த படத்தின் நிலப்பரப்பு கதைக்களம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்தப் படத்தில் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேட்டுவம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள், கதை குறித்த விடியோ, ‘வேர்ட் ஆஃப் வேட்டுவம்’ என்கிற பெயரில் இன்று (செப். 18) வெளியாகியுள்ளது. வேட்டுவம் திரைப்படம் பிரமிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்ப் படங்கள் எனக்கு பைபிள் மாதிரி... நானியின் உற்சாகமான பேச்சு!Pa Ranjith An Introduction to Vettuvam World Of Vettuvam video