பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது சொந்தத் தொகுதியான துரியில் செப். 20 முதல் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் பிரசாரத்திற்குத் தலைமை தாங்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவிததார். 2027-ல் பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. சண்டீகரில் செய்தியாளர்களை சந்திந்த சிசோடியா கூறுகையில், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் பட்டியல் சாதியினர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு குழுக்களையும் வாக்குச்சாவடி அளவிலான குழுக்களையும் ஆம் ஆத்மி கட்சி அமைத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 25,332 வாக்குச்சாவடிகளிலும் இந்தக் குழுக்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். 2.68 லட்சம் பேர் கொண்ட வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் சென்று, அரசின் வளர்ச்சிப்பணிகள், நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட வாக்குறுதிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்குச்சாவடி தொண்டர்கள், வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களிடம் பேசுவார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் பஞ்சாப் அரசின் செயல்பாடுகளால் மாநிலம் அடைந்த முன்னேற்றம், குடும்பங்கள் பெற்ற பலன்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மேம்பாடு ஆகியவை குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்று அவர் கூறினார்.வார ராசி பலன்கள் (செப். 18 - 24) 12 ராசிகளுக்கும்! ரிஷபத்துக்கு ஜாக்பாட்!