மும்பை: தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 108 அமெரிக்க டாலரை எட்டியதால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிலைபெற்றது.பணவீக்கம், எண்ணெய் இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக சமநிலை அடைந்துள்ளதால், இது முதலீட்டாளர்களை அச்சத்தில் அழ்த்தி இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.84 என்ற அளவில் தொடங்கி, பிறகு சரிந்து, வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவிலிருந்து 38 காசுகள் குறைந்து ரூ. 95.92 என்று நிறைவடைந்தது.The rupee depreciated 38 paise to close at 95.92 against dollar on Tuesday.கச்சா எண்ணெய், வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!