ஐசிசியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஸ்ரீ சரணி!

Wait 5 sec.

ஐசிசியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதலிடம் பிடித்துள்ளார்.துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது.இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்டதன் மூலம், டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தவரிசையில் அவர் முதல் முறையாக 800 ரேட்டிங் புள்ளிகளைக் கடந்து அசத்தினார். 804 ரேட்டிங் புள்ளிகளுடன் அவர் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.மற்றொரு இந்திய வீராங்கனையான தீப்தி சர்மா நான்கு இடங்கள் முன்னேறி தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். 729 ரேட்டிங் புள்ளிகளுடன் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷூட் 806 ரேட்டிங் புள்ளிகள் பெற்றதே இதுவரையிலான ஒட்டுமொத்த அதிகபட்ச ரேட்டிங் புள்ளிகளாக உள்ளது. மேகன் ஷூட்டின் இந்த சாதனையை முறியடிக்க ஸ்ரீ சரணிக்கு இன்னும் மூன்று ரேட்டிங் புள்ளிகளே தேவைப்படுகின்றன.Indian player Shree charani has secured the top spot in the ICC rankings for the best bowlers.மீண்டும் இந்திய அணிக்காக விளையாடினால் மகிழ்ச்சியடைவேன்: புவனேஷ்வர் குமார்