த பூம் எஃபெக்ட்: ஜஸ்ப்ரீத் பும்ரா பற்றிய புத்தகம்!

Wait 5 sec.

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா (32 வயது) பற்றிய புதிய புத்தகம் ’த பூம் எஃபெக்ட் - The Boom Effect' வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. உலக அளவில் ஜஸ்ப்ரீத் பும்ரா தனித்துவமான வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா அசத்தியுள்ளார். வித்தியாசமான பந்துவீச்சினால் கவனம் பெற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் புகழ்பெற்றார். பின்னர் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.இதுவரை மொத்தமாக 52 டெஸ்ஸ்ட்டில் 234 விக்கெட்டுகளும், 91 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், 96 டி20 போட்டிகளில் 122 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 158 போட்டிகளில் 187 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். இந்த நிலையில், பும்ராவின் பலம், அவரது உடல் திறன், அவர் எப்படி பந்துவீசுகிறார் என்பதை ஆராய்ச்சி செய்து இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது. பென்குவின் வெளியிடும் இந்தப் புத்தகத்தை ஊடகவியலாளர்கள் ஆயுஷ் புத்ரன், நிகோலஸ் ப்ரூக்ஸ் இணைந்து எழுதியுள்ளார்கள். ஏற்கெனவே ஆயுஷ் புத்ரன் எம்.எஸ். தோனியின் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். நிகோலஸ் ப்ரூக்ஸ் எழுதிய இலங்கை கிரிக்கெட் அணி குறித்து எழுதிய ‘ஏன் ஐஸ்லேண்ட் இலெவன்’ என்ற புத்தகம் எம்சிசியின் சிறந்த புத்தகம் என்ற விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகத்தில் அகமதாபாத் முதல் சர்வதேச அரங்கில் எப்படி பும்ரா உயர்ந்தார் என்பதனை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார்கள். மூன்று பிரிவுகளாக இந்தப் புத்தகம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.சிட்னி ஸ்வீனியின் நிர்வாண விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீராங்கனைகள்!'The Boom Effect': Book tells story behind making of India's ace pacer Jasprit Bumrah