ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா வென்றுள்ளார்.இலங்கை அணியின் இளம் வீரரான சோனல் தினுஷா அண்மையில் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதல் முறையாக ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் சேர்த்து சோனல் தினுஷா இலங்கை அணிக்காக வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் 140 ரன்ற நம்பமுடியாத சராசரியுடன் அவர் 420 ரன்கள் குவித்தார்.முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சோனல் தினுஷா 100 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 84 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்தார். இவரது அபார ஆட்டத்தினால் இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து சோனல் தினுஷா பேசியதாவது: என்னுடைய ஆரம்பக் கட்ட கிரிக்கெட் பயணத்தில் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதை எனக்கு வழங்கியுள்ள ஐசிசிக்கு நன்றிகூற கடமைப் பட்டிருக்கிறேன்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எப்போதும் என்னுடைய மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். மூன்று சதங்கள் அதுவும் கொழும்பு மற்றும் காலே திடலில் விளாசியது சிறப்பான உணர்வைத் தந்தது. முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை அணிக்காக இனிவரும் காலங்களில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்றார்.Sri Lankan youngster Sonal Dinusha has won the ICC Player of the Month award for August.ஆப்கனுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?