நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான அன்பில் அவன் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அசோக் செல்வன் நாயகனாக நடித்து எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அன்பில் அவன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அன்பில் அவன் திரைப்படம் வருகிற செப்.25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. The trailer of the film Anbil Avan, starring actor Ashok Selvan, was released today.அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்த லவ்! ஓடிடி தொடர் வெளியீடு அறிவிப்பு!