பிக் பாஸ் 10 : ஷாதிகாவின் நடனத்துக்கு என்ன குறை! குவியும் பாராட்டுகள்!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஷாதிகாவின் நடத்துக்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தலைவியாக முடிந்த வரையில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், வெளிப்படையான பேச்சுடன் நடனத்திலும் ஷாதிகா கவர்ந்து வருவதாக ரசிகர்கள் பலர் அவரின் நடன விடியோவை பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. கடந்த இரு சீசன்களை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 2வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஷமா இந்த வாரத்துக்கான ஆளும் அணியின் தலைவியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி 11வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று எந்தவொரு டாஸ்க்கும் இல்லாதபோது போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டும் வகையிலான செயல்களில் ஈடுபட்டனர். குழுவாக பாடல் பாட, சில போட்டியாளர்கள் நடனமாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். அந்தவகையில் இன்று புடவை அணிந்திருந்த ஷாதிகா, நடிகை ஸ்நேகாவைப் போன்று நடனமாடினார். ஆனந்தம் படத்தின் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலுக்கு ஏற்றவாறு ஷாதிகா நடனமாடியது, பிக் பாஸ் வீட்டில் இருந்த பலரையும் கவர்ந்தது. இதுமட்டுமின்றி ரசிகர்கள் பலர் ஷாதிகாவை பாராட்டி வருகின்றனர். பிக் பாஸ் டாஸ்க்குகளிலும் சிறப்பாக பங்கேற்பதாகவும், வெளிப்படையாக பேசுவதாகவும், நல்ல பண்புகளுடன் இருப்பதாகவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த சீசனில் கிடைத்த மிகச்சிறப்பான போட்டியாளராகவும் ஷாதிகா இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.பிக் பாஸ் 10 : லட்சுமி பிரியாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்! Bigg boss 10 tamil actress shatiga dance video goes viral