மொத ராத்திரி பட இயக்குநரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்!

Wait 5 sec.

மொத ராத்திரி திரைப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான “மொத ராத்திரி” படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவைக் கலந்த கதைகளத்துடன் உருவான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ராஜா கருப்பசாமியை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று (செப். 17) நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுபற்றி, இயக்குநர் ராஜா கருப்பசாமி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “என் வாழ்க்கையில் ஒரு நாளும் உங்கள் சினிமாவைக் குறித்து பேசாமலோ, உங்களின் படங்களைப் பார்க்காமலோ, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்யாமலோ இருந்ததில்லை.ஒரு நடிகரால் எப்படி ஒரு கதாபாத்திரத்திற்குள் முழுமையாக ஒன்றிவிட முடியும் என்பதையும், ஒரு படைப்பாளி எப்படி சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதையும் உங்களின் படங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தனஎன்றும் உங்கள் ரசிகன்” எனக் கூறியுள்ளார்.இத்துடன், “மொத ராத்திரி” படம் வரும் செப்.18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் 10 : ஷாதிகாவின் நடனத்துக்கு என்ன குறை! குவியும் பாராட்டுகள்!Actor Kamal Haasan personally invited and appreciated Raja Karuppasamy, the director of the film “Motha Rathiri”.