இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீவிரேந்திர சேவாக் எமன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் எதிரணி பெளலர்கள், சேவாக்கை பார்க்கும் விதம் இவ்வாறுதான் இருக்கும் என அவரின் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரைஸ் & ஃபால் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தொகுத்து வழங்குகிறார். 15 பிரபலங்கள் பங்கேற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல அதிரடி டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளன. உயிரை துச்சமாக நினைத்து போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை மேலும் சோதிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக இந்த வாரம் எமதர்மன் வேடமணிந்துள்ளார் சேவாக். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேவாக் பகிர்ந்துள்ளார். இதில், கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சேவாக்கின் தோற்றத்தை புகழ்ந்து வருகின்றனர். இந்திய அணிக்காக விளையாடிக்கொண்டு இருந்த காலகட்டத்தில், எதிரணி பெளலர்களுக்கு சேவாக், எமனைப்போன்றுதான் காட்சி அளித்திருப்பார் என கிரிக்கெட் வீரர்கள் உள்பட ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வைரலாகும் பதிவுகள்...ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற சோனல் தினுஷா!Former cricketer virender Sehwag in the role of Yama