விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உடல் கல்வி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.சிவகாசி அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடல் கல்வி ஆசிரியராக சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை, சிவாநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கிருஷ்ணன் (39) பணியாற்றி வந்தாா். இவா் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.இதுகுறித்த சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.