கரூா் - மூா்த்திபாளையம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) செப்டம்பா் 22, 24, 26 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், எரியோடு நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும். இதேபோல, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) செப்டம்பா் 22, 24, 26 ஆகிய நாள்களில் பாலக்காடு - புகழூா் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.