நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் அட்லி தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1980-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும், இப்படத்தில் இடம்பெற்ற மகளே பாடலும் கவனம் பெற்றுவரும் நிலையில், பத்தா டீசர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் தோற்றமும் அவரது கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. The teaser for the film Paththa, starring actor Vijay Sethupathi, has been released.