ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

Wait 5 sec.

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.சமுக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16-ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் தென்னாற்காடு மாவட்டம், கடலூரில் சிவசிதம்பரம் படையாட்சி - ரெத்தினம்மாள் தம்பதியருக்கு 16.9.1918 அன்று மகனாகப் பிறந்தார். இளமையில் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். அந்தக்கால கல்வியான இன்டர்மீடியட் வரை கல்வி பயின்றார்.1950-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இளம் வயதிலேயே சமுதாயப் பணியில் நாட்டம் கொண்டதன் விளைவாக, தனது 24-வது வயதில் கடலூர் நகராட்சியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நகராட்சித் தலைவராகவும் தேர்வு பெற்றார். மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிநீர் திட்டம் கொண்டு வந்தார்.தமது 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர், இரண்டு முறை மேலவை உறுப்பினர், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் என்றளவிலும் மக்கள் பணியாற்றினார்.ராமசாமி படையாட்சியாரின் வேண்டுகோளின் பேரில், 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு முதலாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு என்ற அமைப்பை எ.என் சட்டநாதன் என்பவரை தலைவராக கொண்டு அமைத்தார். 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று மறைந்தார். இவர் மக்களுக்கு ஆற்றிய சேவையை போற்றுகின்ற வகையில், 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது.அவரது நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள்எம். அருள் பிரகாசம் (சைதாப்பேட்டை), சௌ. தியாகராஜன் (செங்கல்பட்டு), ஈசிஆர். பி.சரவண மூர்த்தி (சோழிங்கநல்லூர்), ஜெ. காமாட்சி (பல்லாவரம்), பா.விஜயராஜ் (திருப்போரூர்),ம.ஹரிஷ் (ஆலந்தூர்), செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். Ramasamy Padayatchiyar Birthday: Ministers pay tribute by garlanding and showering flowersயுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல்: மு.வீரபாண்டியன் கண்டனம்