திரிபுராவில் ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; லாரி ஓட்டுநர் கைது

Wait 5 sec.

புது தில்லி: அகர்தலாவுக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.அசாமிலிருந்து போதைப்பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரதசிய தகவல் கிடைத்தது.இதைதொடர்ந்து, வட திரிபுரா காவல்துறை, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இணைந்து திரிபுராவின் பனிசாகர் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அசாமில் இருந்து அகர்தலா நோக்கி வந்த குறிப்பிடப்பட்ட அந்த லாரியை பனிசாகர் சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, லாரியையும், போதைப் பொருளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி ஓட்டுநரை கைது செய்தனர். இதுதொடர்பாக பனிசாகர் துணைப் பிரிவு காவல் அதிகாரி கிஷாலய் சிசோடியா கூறியதாவது: அசாமில் இருந்து அகர்தலாவுக்கு இந்த போதைப் பொருளை கட்டத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ போதைப்பொருளின் இந்திய மதிப்பு ரூ.40 கோடி எனவும், இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.125 கோடி.மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தடயவியல் அறிவியல் ஆய்வக குழுவினர் பரிசோதித்ததாகவும், அது 'யாபா' போதைப்பொருள் என்பதை உறுதிப்படுத்தியதாக சிசோடியா தெரிவித்தார்.இந்த நடவடிக்கைக்கு உதவிய பனிசாகர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் வட திரிபுரா காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் ராய் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.போதைப்பொருள் இல்லாத திரிபுராவை உருவாக்கும் மாநில அரசின் இலக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிசோடியா குறிப்பிட்டார்.North Tripura Police, Assam Rifles and the Directorate of Revenue Intelligence (DRI) in a joint operation seized around 5 lakh yaba tablets...மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 பேர் கைது