நேபாள வெள்ளம்! 17,000 குழந்தைகளுக்கு அவசர மனநல ஆலோசனை தேவை - யுனிசெஃப்!

Wait 5 sec.

நேபாளத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசர மனநல மற்றும் சமூக உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நேபாளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான பேரழிவில் பல குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். வீடுகள், பள்ளிகள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து தனிமையில் வாடி வருகின்றனர். இந்த பெருவெள்ளத்தால் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளுக்கு மனநல மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனை தேவைப்படுவகின்றது. துணையின்றி குடும்பத்தினரைப் பிரிந்து தவிக்கும் சுமார் 541 குழந்தைகள் மனரீதியாக அதிக ஆபத்தில் உள்ளனர், அவர்களுக்குப் பாதுகாப்பு சேவைகள் தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியது. கண்ணுக்குத் தெரியும் அழிவைத் தாண்டி, இந்த வெள்ளம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீது ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளதாக நேபாளத்திற்கான யுனிசெஃப் பிரதிநிதி ஆலஸ் அகுங்கா கூறினார். பள்ளிகள் செயல்படும்போது இந்த வெள்ளப்பெருக்கு தாக்கியதால், குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வை ஒரு கணத்தில் சிதைத்தது. பல குழந்தைகள் மனதை உலுக்கும் நிகழ்வுகளை நேரில் கண்டனர். எனவே, குழந்தைகள் ஒருவித பயம், பதற்ற உணர்வுடன், துயரத்துடன் போராடி வருகின்றனர். சிலர் தாங்கள் அனுபவித்ததைப் பற்றிப் பேச முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள், முக்கிய உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் தங்கள் அனுபவங்களைக் கையாளவும், பாதுகாப்பு உணவை மீண்டும் பெறவும், மீண்டு வரத் தொடங்கவும் மனநலம் மற்றும் உளவியல் ரீதியான சமூக ஆலோசனை தேவைப்படுவதாக அவர் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் யுனிசெஃப்-இன் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15 அன்று மாலை 7 மணி நிலவரப்படி, 1,399 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாகவும், 5,179 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சித்வான், நவல்ப்பராசி கிழக்கு, நவல்ப்பராசி மேற்கு, நுவாகோட், ரசுவா, கோர்கா, தடிங் மற்றும் தனஹுன் ஆகிய பகுதிகளில் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.13,742 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 மருத்துவமனைகளில் 343 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர்களில் 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் 9,496 பேருக்குச் சிகிச்சை அளித்துள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அதன் விளைவுகளைச் சமாளிக்கவும், மீண்டு வரவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும் தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனநலச் சேவைகளில் முதலீட்டை அதிகரிக்குமாறு யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது. More than 17,000 children affected by the devastating flash floods in Nepal require urgent mental health and psychosocial support as they cope with trauma, displacement and the loss of loved ones, UNICEF said, warning of the severe emotional and social impact of the disaster.