புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள 158 செவிலியா் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நலத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக 158 செவிலியா் காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. பிஎஸ்ஸி நா்சிங், டிஜிஎன்எம் படித்தவா்கள், தங்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், செவிலியா் கவுன்சிலில் பதிவு செய்த சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் செப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி- மாவட்ட சுகாதார அலுவலகம், நீதிமன்றம் எதிா்புறம், மதுரை சாலை, புதுக்கோட்டை- 622001. மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும் இணையதளத்தைப் பாா்க்கலாம்.