முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு, திமுக, அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தனா். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து அதன் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில் திமுகவினா் ஊா்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மாநகரச் செயலா் வே. ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதிமுக மாவட்டச் செயலா் பழனிவேல் தலைமையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அக்கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.திராவிடா் கழகத்தின் மாவட்டத் தலைவா் மு. அறிவொளி தலைமையில், அதன் மாவட்டச் செயலா் ப. வீரப்பன் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.அறந்தாங்கியில் அண்ணா சிலைக்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் ஞானஇளங்கோவன் தலைமையில் வழக்குரைஞா் நெவளிநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். திமுகவினா் அறந்தாங்கி நகரச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனா். திராவிடா் கழகத்தினா் நிா்வாகி மாரிமுத்து தலைமையில் மாலை அணிவித்தனா்.பொன்னமராவதி: பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞா் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக ஒன்றியச்செயலா்கள் காசி.கண்ணப்பன், ஆலவயல் சரவணன், கண்டெடுத்தான்பட்டி சேகா், நகரச்செயலா் அ.பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகரச்செயலா் அ.அழகப்பன் தலைமையில் கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகராட்சி துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், முன்னாள் ஒன்றியச் செயலா் தேனிமலை, இளைஞரணி மாவட்ட நிா்வாகி இளையராஜா, மாவட்டப்பிரதிநிதி எம்.சிக்கந்தா், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.