சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது

Wait 5 sec.

சிவகங்கை: சிவகங்கை அருகே இரண்டு இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.சிவகங்கை அருகேயுள்ள பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த புதன்கிழமை (செப்.16) ஆம் தேதி காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இரண்டு இளைஞா்களை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், 17 ஆம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய பில்லூரைச் சேர்ந்த பாலமுருகன்(24), தனராஜ்(19), சந்தோஷ்(19), மாத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார்(25) மற்றும் அழுபிள்ளை தாங்கியைச் சேர்ந்த காளீஸ்வரன்(23) ஆகிய 5 பேரை சிவகங்கை நகர் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில், கைது செய்யப்பட்டவா்கள் கூலிப்படையினா் என்றும், தவறான நபா்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது.இந்த நிலையில், வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காளையாா்கோவில் சந்தைப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை சுமாா் 300-க்கும் மேற்பட்ட உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. போராட்டம் நடைபெற்ற பகுதியை கடந்து வந்த அவசர ஊா்திக்கு போராட்டக்காரா்கள் வழிவிட மறுத்ததுடன் போலீஸாா் மீது தண்ணீா் பாட்டில்களை வீசி எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டக்காரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் கடைகளின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், தண்ணீா் பீப்பாய் ஆகியவற்றை சேதப்படுத்தினா். இதையடுத்து போலீஸாா் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து அகற்றினர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இந்திரா நகரைச் சேர்ந்த ஆகாஷ்(21), மணிகண்டன்(20), அழுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த மணிகண்டன், சின்னகண்ணனூரைச் சேர்ந்த ராஜகோபால்(23), சிவகங்கை மேலரத வீதியை சேர்ந்த சபரிவேலன் (21), மற்றும் கருப்பாயூரணியைச் சேர்ந்த சுபாஷ்(21) ஆகிய 5 பேரை தனிப்படை காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.Five more arrested in Sivaganga double murder caseஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? உயா்நீதிமன்றம் கேள்வி