ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கால்பந்துத் தொடரில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்தவராக ஹாரி கேன் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் ஜெர்மனி லீக்கில் எப்ஃசி பயர்ன் மியூனிக் அணியில் விளையாடி வருகிறார். இதில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இன்றைய புன்டெஸ்லீகா போட்டியில் பயர்ன் மியூனிக் - யுனியன் பெர்லின் உடன் மோதியது. இதில் 7-0 என அந்த அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மைக்கேல் ஒலிஸே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஹாரி கேன் இரண்டு கோல்கள் அடித்தார். இத்துடன் ஹாரி கேன் 98 போட்டிகளில் 101 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.புன்டெஸ்லீகா தொடரில் அதிவேக 100 கோல்கள் 1. ஹாரி கேன் - 98 போட்டிகளில் 2. டீட்டர் முல்லர் - 129 போட்டிகளில் 3. ஜெர்ட் முல்லர் - 136 போட்டிகளில் ஹாரி கேன் பேலந்தோர் விருதிலும் போட்டியாளராக தேர்வாகியுள்ளார். உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோல்வியுற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்தது. . pic.twitter.com/Vy6vgvrUCD— FC Bayern (@FCBayernEN) September 18, 2026