யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

Wait 5 sec.

ரூ.100 பரிவர்த்தனைக்கு யுபிஐ கட்டணமாக 40 காசு செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள் என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும் வணிகர்களுக்கு ரூ.2000க்கும் மேல் மேற்கொள்ளும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது என்ற முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்கான எம்டிஆர் எனப்படும் கட்டணம் வசூலிப்பதை நியாயப்படுத்திப் பேசியிருக்கும் அசோக் குமார் லஹிரி, யுபிஐ மூலம் ஒரு 100 ரூபாயை பரிவர்த்தனை செய்யும்போது 40 பைசா கட்டணம் செலுத்துவது என்பது மிகக் குறைந்த அளவுதான்.டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு நெடுங்காலம் இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு 40 பைசா செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள் என்று என்றும் கூறியிருக்கிறார்.குறிப்பாக ரூ.2000க்கு மேல் செலுத்தினால் கட்டணம் என்பதுதான் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. காரணம் சாதாரண குடும்பங்கள் செலுத்தும் காசுக்கு கட்டணம் வசூலிக்கும்போது அதிகப்படியான தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.75 ஆயிரத்துக்கு மேல் எந்தத் தொகை செலுத்தினாலும் அதிகபட்சமாக ரூ.300 தான் செலுத்த வேண்டும். ஆனால், இதையே அதிகத் தொகை செலுத்துவோருக்கு மட்டும் கட்டணம் என்று வைத்தால் சாதாரண ஏழை மக்களும் வணிகர்களும் பாதிக்கப்பட மாட்டார்களே, ஏன் எப்போதும் சிறிய கட்டணமாக இருந்தாலும் ஏழைகள் பாதிக்கப்படுவது போல நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சிறு, குறு வணிகர்களின் கேள்வியாக உள்ளது.நீதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் லஹிரி மேற்கு வங்க பாஜக எல்எல்ஏவும், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 15-வது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.