அரசியலில் அடுத்த தலைமுறை வலுவாக இருக்கும்; காரணம் விஜய்: அட்லீ

Wait 5 sec.

விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ, “அரசியலில் அடுத்த தலைமுறை வலுவாக இருக்கும்; காரணம் விஜய் அண்ணாவாகத்தான் இருப்பார்” எனப் பேசியுள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் அட்லி தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1980-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகியுள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது தலைமைப் பண்பு குறித்தான பேச்சு முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகப் பலரும் சமூக வலைதளத்தில் பேசினார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்தது.இந்த நிலையில், பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதன் தயாரிப்பாளரான அட்லீ பேசியது விஜய் சேதுபதிக்கு பதிலடி தரும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் பேசியிருப்பதாவது: அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். நான் அரசியல்வாதியும் அல்ல; நான் அரசியல் பேசுவதும் இல்லை. என் முந்தைய தலைமுறையையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது 5 வயது குழந்தைகளும் சட்டப்பேரவையை நேரலையில் காலையில் பார்க்கிறார்கள். வலுவான தலைமுறையினரை விஜய் அண்ணா உருவாக்கியுள்ளார். அதில் சந்தேகமே கிடையாது. அரசியல் எல்லாம் நல்லதல்ல; சரிவாராது என்றெல்லாம் முன்பு சொல்வார்கள். ஆனால், அது மாறியிருக்கிறது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது மூளையைப் பொருத்தது. யாரும் நம்மை பாதிக்க முடியாது என்றார்.