திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை!

Wait 5 sec.

திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று கருட வாகன சேவையில் சுவாமி வீதி உலா நடை​பெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மலையப்பர் சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் சுவாமி நாச்சியார் திருக்கோலத்தில் (ஜெகன் மோகினி அலங்காரம்) மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை வீதியுலா இன்று மாலை 6.30 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 11 மணி வரை நடைபெற உள்ள இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க கருட சேவையைக் காண திருமலையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். எனவே, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புப் பணியில் 5,000 போலீஸாரும், 1,300 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!On the fifth day of the Tirupati Sri Venkateswara Swamy Temple Brahmotsavam today, the deity's procession is taking place in the Garuda Vahana Seva.