மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.திமுகவின் முப்பெரும் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும். அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் முப்பெரும் விழாவை திமுக நடத்தி வருகிறது.இந்த விழாவில் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.முன்னதாக, கடந்த செப். 15 ஆம் தேதியிலேயே முப்பெரும் விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தச் சமயத்தில் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மீண்டும் மறுதேதி அறிவிக்கப்பட்டு, சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப். 19) மாலை 5 மணியளவில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.இதில் பேசிய முக ஸ்டாலின், “ஆட்சியமைத்துள்ள கட்சிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கூட கிடைக்கவில்லை.தமிழகமே அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஆட்சி நடத்தும் கட்சி ஏற்படுத்தி வருகின்றது.என்னுடைய மிசா கைதை நான் எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை” என்று பேசியுள்ளார். DMK leader M.K. Stalin has stated that there is no need for him to prove to anyone that he was arrested under MISA.24 மணி நேரத்தில் 8 கொலைகள்!முதல்வரைப் போல காவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா? கனிமொழி