கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

Wait 5 sec.

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்.9- ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை(செப்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.எஸ். பாபு தொடர்ந்து பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருக்கிறார். அவரது உடல்நிலை சார்ந்த அளவீடுகள் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. அவர், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! The hospital management stated that Kolathur MLA V.S. Babu's health condition has shown improvement