ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து லுங்கி இங்கிடி விலகல்!

Wait 5 sec.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.Proteas Men Squad Update - Dafabet ODI series vs Australia Lungi Ngidi has been ruled out of the three-match Dafabet ODI series against Australia with a right hamstring injury.His availability for the subsequent Test series will be assessed closer to the start of the… pic.twitter.com/OcjHa9YIm7— Proteas Men (@ProteasMenCSA) September 18, 2026காயம் காரணமாக ஏற்கனெவே ககிசோ ரபாடா மற்றும் ஓட்னில் பார்ட்மேன் விலகிய நிலையில், தற்போது அந்த வரிசையில் லுங்கி இங்கிடியும் இணைந்துள்ளார். லுங்கி இங்கிடிக்குப் பதிலாக அணியில் மாற்று வீரராக இளம் வேகப் பந்துவீச்சாளர் குபானி மொகோனா சேர்க்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் பாஷ், மேத்யூ ப்ரீட்ஸ்க், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, ஜோர்ன் ஃபோர்டூயின், டுயன் யான்சென், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், குவெனா மாபாகா, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், குபானி மொகோனா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.South Africa's Right-arm quick Lungi Ngidi has been ruled out of the upcoming three-match ODI series against Australia due to a right hamstring injury.டி20 போட்டியில் இந்திய அணி விரைவில் 300 ரன்கள் குவிக்கும்: கௌதம் கம்பீர்