எஸ்எஃப்ஐ தலைவர் மிருதுளாவுக்கு அச்சுறுத்தல்! - நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!

Wait 5 sec.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி. மிருதுளாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வெளியான சமூக ஊடகப் பதிவுகளுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்எஃப்ஐ தலைவர் மிருதுளா கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் அளித்த பேட்டியைக் குறிப்பிட்டு அவரை இழிவு செய்யும் வகையில் தொடர்ந்து வெளியாகி வரும் சமூக ஊடகப் பதிவுகளுக்கு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (செப். 18) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் சிபிஐ(எம்) கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான சி. மிருதுளா அவர்கள் சமூக வலைதளத்தில் அளித்த பேட்டியை குறிப்பிட்டு அவரை இழிவு செய்யும் மற்றும் அச்சுறுத்தும் வகையில்  சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 10 நாள்களாக ஆணாதிக்க, சாதிய வன்மங்களுடன் சி. மிருதுளா சமூக வலைதளப் பக்கங்களில் தாக்கப்பட்டு வருகிறார். இது கருத்துரிமை மற்றும் போராட்ட நடவடிக்கையை ஒடுக்கும் பிற்போக்கு கருத்தியலை நோக்கமாக கொண்ட இழிசெயலாகும்.எனவே, உடனடியாக தமிழ்நாடு காவல்துறை தலையீடு செய்வது அவசியம். சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மீதும், சி. மிருதுளா போன்ற மாநில தலைவர் பொறுப்புகளில் உள்ள பெண்கள் மீதும் நடைபெறும் சித்தரிப்புகளையும், வன்மம் கொண்ட வார்த்தைகளையும் பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை CPIM has condemned the social media posts containing threats against C. Mridula, the Tamil Nadu State President of the SFI.