பொம்பளதான் அழணும்னு எழுதிவச்சிருக்கா? டோரதி பட டிரைலர்!

Wait 5 sec.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள “டோரதி” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் “டோரதி”. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள “டோரதி” திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (செப். 18) வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படம் வரும் செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.முன்னதாக, 1980-களில் நடைபெறும் புதுமையான கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.குத்தாட்ட இசையுடன் பாடகர் அந்தோனி தாசன் பாடிய இப்படத்தின் கல்யாண விருந்து பாடல் இணையம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இளையராஜா இசையமைத்த மராத்தி படமான கோந்தல் 2027 ஆஸ்கருக்கு தேர்வு! The trailer for the film "Dorothy," directed by Karthik Subbaraj, has been released.