இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் பிரசாரம்!

Wait 5 sec.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலா 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் செப்.24, 25 மற்றும் அக்.3ஆம் தேதியும் தாராபுரம் தொகுதியில் செப்.27, 28 மற்றும் அக்.2ஆம் தேதி அவர் பிரசாரம் செய்வார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் அக்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம்(தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் பானுமதியும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். எனவே, இந்த இரு தொகுதிகளிலும் வெற்றியை தக்கவைக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. AIADMK General Secretary Edappadi Palaniswami is set to campaign for 3 days each in the two constituencies of Maduranthakam and Dharapuram.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!