இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியதுதான் தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியதுஇந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 229 ரன்களும், சஞ்சு சாம்சன் 117 ரன்களும் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியதுதான் தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சன் எனக்கு எந்தவொரு நன்றியும் தெரிவிக்க அவசியமில்லை. அவர் இந்திய அணியில் இருப்பதற்கு காரணம் அவரது திறமையே. அவரால் என்ன முடியும் என்பதைக் காட்டியுள்ளார். திறமை இல்லாமல் ஒருவரால் உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருதினை வெல்ல முடியாது. அவர் அணிக்காக நன்றாக விளையாடியிருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பிளேயிங் லெவனிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்குவது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. என்னுடைய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் நான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு என்றே அதனைக் கூறுவேன். ஏனெனில், சஞ்சு சாம்சன் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், சில நேரங்களில் வீரர்களின் ஃபார்மினை கருத்தில் கொண்டும் முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்ததால், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அறிமுக வீரராக வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Gautam Gambhir has stated that dropping Sanju Samson from the playing XI during the T20 series against England was the toughest decision he ever made.டி20 போட்டியில் இந்திய அணி விரைவில் 300 ரன்கள் குவிக்கும்: கௌதம் கம்பீர்