புதுதில்லி: எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு 1.27 சதவீதம் உயர்ந்து ரூ. 717 ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இந்த பங்கு 3.14 சதவீதம் உயர்ந்து ரூ. 730.30 ஐ எட்டியது.நிஃப்டி-யில் இந்த பங்கு 1.17 சதவீதம் உயர்ந்து ரூ. 716.55 ஆக நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது, இந்த பங்கு 3.17 சதவீதம் உயர்ந்து ரூ. 730.75 ஐ எட்டியது.இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 14,782.66 கோடி அதிகரித்து ரூ. 11,05,196.64 கோடியாக உயர்ந்தது.வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி மாற்றம் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் ஏற்றம் கண்டதாக பிஎல் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் வர்த்தகப் பிரிவுத் தலைவரான விக்ரம் தெரிவித்தார்.Shares of HDFC Bank ended over 1 per cent higher on Tuesday.கச்சா எண்ணெய், வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!