மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி (38 வயது) நடிப்பில் உருவாகும் ‘பிரியத்தமன்’ என்ற படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆர்ஜே, விஜேவாக தொடங்கிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி 2011ல் மோகன்லால் படத்தில் அறிமுகமாகி தற்போது முக்கிய கதாநாயகனாக மாறியுள்ளார்.ஸ்ரீநாத் பாஸியின் கும்பலாங்கி நைட்ஸ், வைரஸ், கப்பேலா, ஹோம் ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. மஞ்ஞுமெல் பாய்ஸ் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.கடைசியாக இவரது நடிப்பில் கரகம் என்ற படம் கடந்த மே மாதத்தில் வெளியானது. தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். கஞ்சா மற்றும் போதைப் பழக்க வழக்குகளில் அடிக்கடி இவரது பெயர் அடிப்பட்டு சர்ச்சையிலும் சிக்கினார். இந்த நிலையில், ஷ்ரேயா நிதி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரியதமன் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கிருஷ்ணா பூஜப்பூரா எழுதிய இந்தப் படத்தை ரெஜி பிரபாகரன் இயக்கியுள்ளார். நாயகியாக தேஜ லஷ்மி நடித்துள்ளார். விரைவில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார். View this post on Instagram என்னுடைய முதல் காதல்... சிம்புவைச் சந்தித்த மொத ராத்திரி பட நடிகை சுமித்ரா நெகிழ்ச்சி!Priyadaman: Srinath Bhasi's new film title poster announced!