மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!

Wait 5 sec.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப். 16, 17 தேதிகளில் தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.17 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் செப்.17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கல் இயங்கும் என தெற்கு ரயில்வே இன்று (செப். 15) அறிவித்துள்ளது.தாம்பரத்திலிருந்து செப்.16 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு சிறப்பு ரயில் (06159) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்.17 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு சிறப்பு ரயில் (06160) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். Unreserved MEMU Special Trains between Tambaram and MaduraiTo facilitate travel between Tambaram and Madurai, Unreserved MEMU Special Train services will operate on 16th & 17th September 2026.Train No. 06159: Tambaram → MaduraiTrain No. 06160: Madurai → Tambaram… pic.twitter.com/jSK1z1z7kU— Southern Railway (@GMSRailway) September 15, 2026விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி மாற்றம்!In connection with the consecration ceremony of the Meenakshi Amman Temple, an unreserved special MEMU train will be operated between Tambaram and Madurai on September 16 and 17.