ரூ. 2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் விதிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். அதேபோல, ரூ. 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ. 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஜனவரி 2020 முதல் அமலில் இருந்த ‘பூஜ்ய வணிக பரிவர்த்தனை தள்ளுபடி’ (ஜீரோ எம்டிஆர்) நடைமுறை இந்த நடவடிக்கை மூலம் முழுவுக்கு வந்துள்ளது.புதிய விதிமுறையின் கீழ் ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய துறைகள் சார்ந்த பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ. 5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.பங்குச்சந்தை சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் குறைந்தபட்சமாக 0.02% கட்டணம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.யுபிஐ க்யூஆர் கோடின் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறு வணிகர்களுக்கு இந்தக் கட்டண முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கின் மூலம் 96% வணிகப் பரிவர்த்தனைகள் புதிய கட்டணத்தால் பாதிக்கப்படாது.தனிநபர் - வணிகர் இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளில், ரூ. 2,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4% மற்றும் ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 ஆக வசூலிக்கப்படும்.யுபிஐ மொத்த பரிவர்த்தனைகளில் 37%-ம், பரிவர்த்தனை மதிப்பில் 70%-ம் கொண்டுள்ள தனிநபர்கள் இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டண முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், யூபிஐ செயலிகள் தளப் பயன்பாட்டுக் கட்டணம் (Platform Fee) விதிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ள அரசு, எம்டிஆர் கட்டணத்தை வணிகர்கள் நுகர்வோர் மீது சுமத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்தப் புதிய கட்டண முறையின் மூலம் கிடைக்கும் வருவாயில் 5-ல் ஒரு பங்கு (20%) சிறு வணிகர்களிடையே யுபிஐ பரிவர்த்தனை முறையை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்கப்படும் என மத்திய அரசு புதிய விதிமுறையில் தெரிவித்துள்ளது.The Central Government has introduced a rule to levy charges on transactions exceeding Rs. 2,000.