1965 இந்தியா - பாக். போர் நாயகன் ஏ.டி. குக் காலமானார்! விமானப் படை இரங்கல்!

Wait 5 sec.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் நாயகனும் ஓய்வுபெற்ற விமானப் படை வீரருமான ஆல்ஃபிரட் டைரோன் குக் காலமானார்.1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரின்போது மேற்கு வங்கத்தின் கலைகுண்டா பகுதியில் எதிரி விமானங்களுடன் ஏ.டி. குக் நடத்திய விமானச் சண்டையானது இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்று ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஏ.டி. குக் விமானப் படையின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இந்தியா வந்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் தில்லியில் நேற்று (செப். 19) காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலோ இந்தியரான ஏ.டி. குக் தன் மறைவுக்குப் பிறகு தனது உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்தியாவின் புனித நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என விரும்பியதாக, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மனிஷ் பட்நகர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, முன்னாள் வீரர் ஏ.டி. குக்கின் மறைவுக்கு இந்திய விமானப் படை மற்றும் ஏராளமான மூத்த ராணுவ அதிகாரிகள் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!Alfred Tyrone Cooke, a hero of the 1965 India-Pakistan war and a retired Air Force veteran, has passed away.