திருச்சியில் விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5-வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு சனிக்கிழமை நேரில் வருகை தந்த வேளாண்மைத் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கையை பரிசீலிக்க 20 நாட்கள் அவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதையேற்று விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை 20 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளன. The protest conducted by farmers in Trichy has been postponed for 20 days.பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!