பருப்பு வேகவைக்கும்போது இதைச் செய்கிறீர்களா?

Wait 5 sec.

சாதாரணமாக நாம் பருப்புகளை வேகவைக்கும்போது தண்ணீர் கொதித்தபிறகு மேல் வரும் நுரையை எடுத்துவிடுவோம். இது சரியானதுதானா? வைட்டமின் பி9, இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் என ஏராளமான சத்துகள் பருப்பில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுப்பொருள். பருப்பு சாம்பார், பருப்பு கூட்டு என பல வகையான பருப்புகள் சேர்த்து சமைக்கும் பல உணவு வகைகள் இருக்கின்றன. இந்த பருப்பை வேகவைக்கும்போது தண்ணீர் கொதித்து நுரை மேலே பொங்கி வரும். இந்த நுரையை பெரும்பாலானோர் ஒரு கரண்டி மூலமாக எடுத்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். அந்த நுரையில் சத்து இல்லை, அது பருப்பில் கழிவு போன்றது, அந்த நுரை உணவின் சுவையைக் கெடுத்து விடும் என்றெல்லாம் கூறப்படுகிறது. உண்மைதானா?பருப்பு வேகவைக்கும்போது உருவாகும் நுரை, ஓர் இயற்கையான விளைவுதான். இதனால் பருப்பு அழுக்காகவோ தரமற்றதாகவோ இருக்கிறது என்று அர்த்தமல்ல. அதேபோல அந்த நுரையும் தரமற்றது என எந்த ஆய்வுகளும் கூறவில்லை. பருப்பை தண்ணீரில் வெப்பத்தில் வேகவைக்கும்போது வெளிப்படும் சேர்மங்களின் கலவையே ஆகும். புரதங்கள், ஸ்டார்ச், சப்போனின்கள் எனப்படும் சேர்மங்கள் அதில் உள்ளன.பருப்பில் நுரையை உருவாக்குவதற்கு சப்போனின்கள் ஒரு காரணமாகும். பருப்பு வகைகளில் உள்ள புரதங்களும் இந்த நுரைக்கு காரணம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 2023 ஆம் ஆண்டு நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் இரண்டுமே நுரையை உருவாக்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த நுரை பாதுகாப்பற்றது, உடலுக்கு நல்லதல்ல என எந்த ஆய்வும் கூறவில்லை. பருப்பில் நுரையை நீக்கும்போது அது சுத்தமானது போலத் தோன்றுகிறது. இரண்டாவது, பருப்பில் இருந்து நீரில் சேரும் சேர்மங்கள் அகற்றப்படுவதால் பருப்பு மென்மையானது போலத் தோற்றமளிக்கிறது. எனினும் நுரையை நீக்குவது என்பது தனிப்பட்ட விருப்பமதான். நுரையை நீக்காவிட்டாலும் சிறிதுநேரத்தில் அந்த நுரை, பருப்புடன் கலந்துவிடும். எனவே பருப்பு வேகும்போது அந்த நுரையை நீக்காமல் அப்படியே விட்டாலும் பாதிப்பு ஒன்றுமில்லை என்றே கூறப்படுகிறது. 'சயின்ஸ் டைரக்ட்' (ScienceDirect) இதழில் 2017-ல் வெளியான ஒரு ஆய்வு, பருப்பைச் சமைத்து சாப்பிடுவதன் மூலமாக அவற்றில் இயற்கையாகக் காணப்படும் சப்போனின்கள் என்ற வேதிப்பொருள்களின் அளவு குறையும் என்று கூறுகிறது. பருப்பைச் சரியாகக் கழுவுதல், போதுமான அளவு நீர் சேர்த்து நன்கு வேகவைத்தல் அவசியம் என்றும் சொல்லப்படுகிறது. Is it right, We skim off the foam that rises to surface when boiling lentils சருமப் பராமரிப்புக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? தோல் நிபுணர்கள் சொல்வதென்ன?