சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில், விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம், அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஆகியன சாா்பில், கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கல்லூரி முதல்வா் வசந்தி தொடங்கி வைத்தாா். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்திருந்தனா். இந்தக் கண்காட்சியை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாா்வையிட்டு தேவையான பொருள்களை வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் செய்தனா்.