பரமக்குடி நகா் பகுதியில் நாளை மின்தடை

Wait 5 sec.

பரமக்குடி நகா் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடியில் அவசரகால மின் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதனால், பரமக்குடிநகரில் மேலசத்திரம், வட்டாட்சியா் அலுவலகம், ஆற்றுப்பாலம், நகராட்சி அலுவலகம், முத்தாலம்மன் கோவில், மருத்துவமனை சாலை, முஷாபா் கனி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.