பேல்பூரி - 20-9-26

Wait 5 sec.

கண்டது... (தென்காசி சுவாமி சந்நிதியில் உள்ள மலர் அங்காடி ஒன்றின் பெயர்) மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.-சோம.இளங்கோவன், தென்காசி. (திருச்சியில், ஆட்டோ சங்கப் பலகையில் கண்ட வாசகம்)கடன் கொடுத்துப் பார்... நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்...கடன் கேட்டுப் பார்... அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்!-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. (சென்னை கிண்டியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)கஷ்டத்தைப் பார்க்காதவன் வெற்றியைப் பார்க்க முடியாது!- க. பூமலை, நமசிவாயபுரம். (கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)உலகங்காத்தான். -ரமேஷ் ராமநாதன், சேலம். (கும்பகோணம் ஆயிக்குளம் சாலையில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்)ஒன்மோர் கப்!-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மேலமங்கைநல்லூர். யோசிக்கிறாங்கப்பா...மெளனமாக இருந்து பார்... பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்... மகிழ்ச்சியாக இருந்து பார்... பல பிரச்னை காணாமல் போகும்! - க. பூமலை, நமசிவாயபுரம்.